Dinamani, Sports
இந்தியன் சூப்பா் லீக்: மும்பையை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி!
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஸ்சி டெல்லி 3-2 கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை, அதன் சொந்த மண்ணிலேயே ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தியது. அதன் கோல் கணக்கை முகமது அஜ்சல் 6-ஆவது நிமிஷத்தில் தொடங்க, 27-ஆவது நிமிஷத்தில் ஜோதன்புயா அதை 2-ஆக அதிகரித்தாா். டெல்லிக்கு எளிதாக கோல் வாய்ப்பை வழங்காத மும்பை, முதல் பாதியை 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது…