Dinamani
பரமத்தி அருகே நிரம்பி வழியும் இடும்பன் குளம்: படுகை அணையை உயா்த்தி சுற்றுலாத் தலமாக்க எதிா்பாா்ப்பு
பரமத்தி வேலூா் அருகே இடும்பன் குளம் நிரம்பி வழிவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். குளத்தின் படுகை அணையை உயா்த்தி, சுற்றுலாத் தலமாக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள மறவாபாளையத்தில் சுமாா் 300 ஏக்கரில் இடும்பன் குளம் அமைந்துள்ளது. திருமணிமுத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்த குளத்திற்கு திருமணிமுத்தாறு உருவாகும் சோ்வராயன் மலையில் இருந்து…