Samayam Tamil
புதுக்கோட்டை செல்லும் முதல்வர் விஜய் - விராலிமலையில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அச்சம்? - ரோட்சோவின் பின்னணி
புதுக்கோட்டையில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து முதல்முறையாக இன்று நவம்பர் 2 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் செல்ல உள்ளார். மேலும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக 5 முறை வெற்றி பெற்ற விராலிமலை தொகுதியில், இந்த முறை முக்கிய நபர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவும், அதன் வெளிப்பாடாகவே முதல்வர் விஜய் விராலிமலையில் ரோட்ஷோ செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.