Hindu Tamil Thisai
2.5 லட்சம் பேருக்கு குடியுரிமை: மே.வ முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள தாக்கூர் நகரில் 'சர்வதேச மத்துவா கோசாய் மாநாடு' நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சுவேந்து அதிகாரி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 25,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரணையை விரைவுபடுத்தி, டிசம்பர் 31-க்குள் 2.5 லட்சம் மனுதாரர்களுக்கு குடியுரிமை வழங்குவோம்…