Samayam Tamil
Shah Rukh Khan Motivational Quotes: "மற்றவர்களை தோற்கடிப்பது பற்றி நினைக்காதீர்கள்; நீங்கள் எப்படி வெற்றி பெறலாம் என்று சிந்தியுங்கள்" - ஷாருக்கான் சொன்ன 5 சிறந்த பொன்மொழிகள்
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான், இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் தனது நடிப்பு திறமையால் மட்டுமல்லாமல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் வாழ்க்கை குறித்த சிந்தனைகளாலும் பலருக்கு ஊக்கமளித்து வருகிறார். சாதாரண தொலைக்காட்சி நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி, இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்த அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெற அவர் கூறிய பொன்மொழிகளையும் அவை உணர்த்தும் வாழ்க்கைப் பாடங்களையும் இங்கு பார்க்கலாம்.