உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

செயற்கைக்கோள் காலர் பொருத்தப்பட்ட சிறுத்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாது: குனோ பூங்கா இயக்குநர் விளக்கம்

எழுதியவர்: ஆனந்த் மோகன் ஜே செயற்கைக்கோள் காலர் பொருத்தப்பட்ட சிறுத்தைகளைத் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பைப் போலத் தொடர்ந்து கண்காணிக்க முடியாது என்று மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவின் இயக்குநர் உத்தம் குமார் சர்மா தெரிவித்துள்ளார். 19 மாத சிறுத்தை ஒன்று உயிரிழந்த விவகாரத்தில் கண்காணிப்புப் பணிகளில் குறைபாடுகள் இருந்ததாக அதிகாரிகள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், செயற்கைக்கோள் கண்காணிப்பு முறையின் வரம்புகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். குனோ தேசியப் பூங்காவின் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வந்த கேஎன்ஜி22 (KNG22) என்ற ஆண் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அர…