Nakkheeran
“தவெக ஆட்சியில் தமிழ்நாடு தொடர் சரிவைச் சந்திக்கிறது” - தங்கம் தென்னரசு வேதனை!
பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு, தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொர…