உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

‘சிஎம் அண்ணா ஒரு செல்ஃபி...’ - முதல்வர் வருகையை ஒட்டி பதாகைகளுடன் குவியும் பெண்கள்!

புதுக்கோட்டையில் இன்று மதியம் 12 மணிக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மணிக்கு மணி மாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் புதுக்கோ்டை மாவட்ட தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். பேருந்து நிலையம் அருகே மதிய நிகழ்ச்சிக்கு காலை 9 மணி முதலே பெண்கள் வந்து ‘சிஎம் அண்ணா ஒரு செல்ஃபி’ என்ற பதாகையை ஏந்தி நிற்கின்றனர்.