உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஒப்பந்தப் பணிகளுக்கு 20% கமிஷன்; தவெக எம்.எல்.ஏ மீது சங்கம் புகார்

சிவகங்கையில், VB-G RAM G திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை விதிகளை மீறி தவெக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்க முயற்சிப்பதாக, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம், அத்தொகுதி தவெக எம்.எல்.ஏ குழந்தை ராணி மீது குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கு 20 சதவீதம் வரை கமிஷன் பெறப்படுவதாகவும் ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் பொருளாளர் எம். ஜெகன் கூறுகையில், “ஒப்பந்தங்களை கட்சி நிர்வாகிகளுக்கு ஒதுக்க எம்.எல்.ஏ திட்டமிடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சமீபத்த…