Indian Express Tamil
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறிய தைவான்; இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளிய ஏஐ வளர்ச்சி
எழுதியவர்: சித்தார்த் உபாசனி பல ஆண்டுகளாக உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு என்ற பெருமையை இந்தியா தக்கவைத்து வந்தது. ஆனால், 2026-ம் ஆண்டில் இந்த நிலை மாறியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், தைவான் தற்போது பொருளாதார வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2026 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு சரிசெய்யப்பட்ட உண்மையான மதிப்பீட்டில் 14.36% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு முந்தைய ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 15.4…