Nakkheeran
“ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் 5 கோடி பேரமா?” - டிடிவி தினகரன் காட்டம்!
தமிழ்நாடு அரசின் சார்பாகச் சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நேற்று (01.11.2026) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மூலம் இயல், இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவிக்கு ஒருவர் ரூ.5 கோடி கொடுப்பதாக சொன்னதாகவும், அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வோம் என்று முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், ரூ.5 கோடியை கொடுக்க முன்வந்தது யார்? என அமைச்சர் ராஜ்மோகன் சொல்லாமல் மூடி மறைத்தது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் யார…