உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

புதுக்கோட்டையில் 44 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்...

புதுக்கோட்டையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர், அங்கிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு சென்றார். புதுக்கோட்டை நகரில் முதலமைச்சர் சாலைவலம் சென்ற நிலையில் சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 68 கோடி ரூபாய் மதிப்பிலான 44 முடிவுற்ற திட்டப்பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைத்து, 11 கோடி ரூபாய் மூலம் 70 புதிய பணிகள…