IBC Tamil
இராவணனும் நாளை மதம் மாற்றப்படலாம் : திருமலையில் பாஸ்கரன் கந்தையா எச்சரிக்கை!
இன்னும் சில காலங்களில் இராவணன் கூட விலை பேசப்படலாம் அல்லது இராவணன் மதம் மாறக்கூடிய சந்தர்ப்பங்களும் திருகோணமலை மண்ணில் இருப்பதாக தொழிலதிபரும் ஐபிசி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் சனிக்கிழமை (31) இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் இதயம். வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்ற இந்த மண் இன்று பல ஆண்டுகளா...