Nakkheeran
தனியாருக்கு மதுக்கடைகள்?; அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி!
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது என ஏற்கெனவே டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அதே நேரத்தில் காலி மது பாட்டிலுக்காக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 கட்டணத்தை மதுபானங்களின் நிர்ணய விலையுடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மதுபானங்களின் விலையுடன் ரூ.10யும் எம்.ஆர்.பி (MRP)இல் சேர்க்கப்படுகிறது. அதே வேளையில், காலி மதுபாட்டிலைத் திருப்பி வழங்கும் நுகர்வோருக்கு ரூ.10 திரும்ப வழங்கும் நடைமுறையும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் திரும்பப்பெறப்படும் காலி மதுபாட்டில்களுக்…