உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகன் வீட்டுக் கல்யாணம்: என் மனது வலிக்கிறது - சுப வீரபாண்டியன் வேதனை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் திமுகவின் மூத்த தலைவருமான துரை முருகனின் பேத்தியும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும் இடையேயான திருமணம் நேற்று நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தை ஒட்டி, என் இதயம் வலிக்கிறது என திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.