Indian Express Tamil
வான்கோழி சைஸ்ல ஒரு டைனோசரா? பழம் மட்டும் சாப்பிட்ட 66 மில்லியன் வருஷத்து 'நரகக் கோழி'
டைனோசர்கள் என்றாலே பிற விலங்குகளை வேட்டையாடித் தின்னும் கொடூரமான மாமிச உண்ணிகள்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், டைனோசர் சகாப்தத்தின் இறுதி நாட்களில் வாழ்ந்த ஒரு புதிய வகை டைனோசர் முற்றிலும் வித்தியாசமான உணவை விரும்பிச் சாப்பிட்டுள்ளது. சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 'டி-ரெக்ஸ்' (T-Rex) போன்ற பிரம்மாண்ட மாமிச உண்ணி டைனோசர்கள் வாழ்ந்த அதே காலத்தில், வான் கோழி அளவிலான ஒரு புதிய டைனோசரும் வாழ்ந்துள்ளது. 'இன்ஃபெர்னோகல்லஸ் ஜேம்சி' (Infernogallus jamesi) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், மாமிசத்திற்குப் பதிலாகப் பழங்களை மட்டுமே விரும்பி உண்டுள்ளது. லத்தீன் மொழியில் 'இன்ஃபெர்னோகல்லஸ்…