உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”உறவினர்கள் யாரும் இல்லை என இளைஞர் கண்ணீர்”; திருமண விழாவில் ஆயிரக்கணக்கில் குவிந்த நெட்டிசன்கள்

தனது காதல் திருமணத்திற்கு வர உறவினர்கள் யாரும் இல்லை என்பதால், இணையத்தில் ஒரு இளைஞர் மனமுருகி வேண்டிக்கொண்டதையடுத்து, அவரது திருமணத்தில் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் குவிந்த சம்பவம் வைரலாகியுள்ளது. சீனாவின், யுனான் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான ஸு செங்ஹாங் என்ற இளைஞர் பல போராட்டங்களுக்குப் பிறகு, தனது காதலியை கரம்பிடித்தார். இவர் சிறுவயதில் இருக்கும்போதே தந்தை உயிர் இழந்துவிட்டார். அவரது தாய் மறுமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார். இதனால், இவரது மூத்த சகோதரனும், இவரும் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இவர் நீண்டகாலமாகச் சேமித்து வைத்திருந்த சிறு தொகையை வைத்து தனது காதலியைத் திருமணம் செய்ய ஏற்…