Indian Express Tamil
குளிர்காலத்தில் வீட்டுக்குள் புகும் எலிகள்... பென்சில் அளவு ஓட்டை இருந்தாலும் ஆபத்து; இந்த இடங்களைச் செக் பண்ணுங்க
குளிர்காலம் தொடங்கும்போது வெளிப்புறச் சூழலில் நிலவும் குளிர் மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாக எலிகள், பெருச்சாளிகள் உள்ளிட்ட கொறிக்கும் உயிரினங்கள் வீடுகளுக்குள் தஞ்சம் புகுவது அதிகரிக்கலாம். குறிப்பாக, சமையலறை, சேமிப்பு அறை, குளியலறை, வீட்டின் மேற்கூரை மற்றும் அலமாரிகளுக்குப் பின்புறம் போன்ற மறைவான இடங்களில் இவை கூடுகட்டி வசிக்க வாய்ப்புள்ளது. வீட்டில் உணவுப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதும், பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொள்ள முடிவதும் எலிகளின் நடமாட்டத்தை அதிகரிக்கின்றன. இவை உணவுப் பொருட்களைக் கடித்து சேதப்படுத்துவதுடன், மின்சார வயர்கள், மரப்பொருட்கள், துணிகள் போன்றவற்றையும் சேதப்படுத்தக்க…