Nakkheeran
அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்; புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு!
புதுக்கோட்டையில் ரூ.23 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறந்து வைப்பதற்காகவும், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (02-11-26) புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக தூரபுதுக்கோட்டைக்கு சென்றார். திறந்தவெளி வாகனத்தில் சென்ற முதல்வர் விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுக்கோட்டைக்கு சென்ற அவருக்கு எம்.பிக்கள் நவாஸ்கனி, துரை வைகோ, ஜோதிமணி, அமைச்சர் முகமது பர்வே…