Indian Express Tamil
எவ்வளவு தேய்த்தாலும் போகாத மெத்தை கறைகள்... சமையலறையில் இருக்கும் இந்தப் பொருளை ட்ரை பண்ணுங்க
நாம் தினமும் பல மணி நேரம் ஓய்வெடுக்கும் இடமாக மெத்தை இருக்கிறது. ஆனால், படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைக்கும் பலரும் அதன் அடியில் இருக்கும் மெத்தையைச் சுத்தம் செய்வதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நாளடைவில் மெத்தையில் படியும் வியர்வை, உடலில் இருந்து வெளியேறும் எண்ணெய் பிசுக்கு, உணவுப் பொருட்கள் சிந்துவதால் ஏற்படும் கறைகள், சிறுநீர் கறைகள் எனப் பல்வேறு காரணங்களால் மெத்தை அழுக்காக மாறுகிறது. குறிப்பாக, ஈரப்பதம் மற்றும் வியர்வை காரணமாக மெத்தையில் ஒருவித துர்நாற்றமும் உருவாகலாம். இதனை அப்படியே விட்டுவிட்டால் தூசி, ஒவ்வாமையை ஏற்படுத்தும் துகள்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.…