உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கோயிலுக்கு போற வயசானவங்க, நீரழிவு நோயாளிகள் இனி சாப்பிடாம வர வேண்டாம்: 17 பெரிய கோவில்கள் அன்னதான திட்டத்தில் விரைவில் இந்த மாற்றம்

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் இனி பக்தர்கள் காலை மற்றும் இரவு நேரங்களிலும் இலவச அன்னதானம் பெறும் வகையில் புதிய திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளைக் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான, சத்து நிறைந்த உணவு வகைகளை வழங்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. ஸ்ரீரங்கம், பழனி, திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட 17 முக்கிய கோயில்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக கோயில்களில் அன்னதானமாக சாதம் மற்றும் அதனுடன் கூடிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால…