Dinamani
ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீச்சு: 4 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் மசூதி மீது கல்வீசியதாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் ஷெர்பாக் பகுதியில் உள்ள பெஹ்ரூ என்ற இடத்தில் அமைந்த மசூதியில் சிலர் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமூக விரோதிகள் சிலர் மசூதி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்திற்கு மதச்சாயம்…