Daily Thanthi
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.34 லட்சம் நன்கொடை
கன்னியாகுமரி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் கடந்த மாதம் ரூ.1.34 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமானோர் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை…