IBC Tamil
யாழில் நடக்கும் அடுத்தடுத்த மரணங்கள் - நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்றைய தினம் (02.11.2026) திங்கட்கிழமை அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தெல்லிப்பழை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்த...