Samayam Tamil
Suriya Jyotika Parenting: ஜோதிகாவின் மனச்சுமையை குறைக்கும் சூர்யாவின் செயல்! குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்கு ஏன் முக்கியம்?
குழந்தை வளர்ப்பு என்பது தாயின் பொறுப்பு மட்டுமே என்ற பொதுவான எண்ணம் மெல்ல மாறி வருகிறது. அதில் தந்தைக்கும் சமமான பங்கு இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில், நடிகை ஜோதிகா சமீபத்திய பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். பள்ளியில் இருந்து வரும் இமெயில்களைப் பார்ப்பது முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள், சுற்றுலா மற்றும் படிப்பு தொடர்பான தகவல்களைக் கவனிப்பது வரை சூர்யா முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக ஜோதிகா கூறியுள்ளார். தந்தைகள் குழந்தை வளர்ப்பில் இப்படி முழுமையாகப் பொறுப்பேற்பது குடும்ப உறவுகளில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.