Indian Express Tamil
தனியார் மயம் ஆகிறதா டாஸ்மாக்? அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்
தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் காலி மதுபாட்டில்கள்தான், 20 நாட்களில் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் தொடங்க உள்ளது இதற்காக 40,048 இயந்திரங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம் தொடர்பாக, கடந்த கால ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளே தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும், மீறினால் சட்டப்படி க…