Hindu Tamil Thisai
அவன் யார்ங்குற ஆர்வம்தான் ‘ஜான் டோ’ - இயக்குநர் மதுமிதா நேர்காணல்
தமிழில், ‘வல்லமை தாராயோ’, ‘கே.டி.என்கிற கருப்புதுரை’, இந்தியில் ‘காளிதர் லாபதா’ உள்பட சில படங்களை இயக்கி யிருக்கும் மதுமிதா, இரட்டை மகிழ்ச்சியில் இருக்கிறார் இப்போது. அவர் இயக்கி இருக்கும் ‘லவ் ஆல்வேஸ்’ என்ற வெப் தொடர், ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அடுத்து அவர் இயக்கி இருக்கும் ‘ஜான் டோ’ திரைப்படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. புரமோஷனில் பிசியாக இருந்த மதுமிதாவிடம் பேசினோம்…