Indian Express Tamil
தி.மு.க தொண்டர் வீட்டுக் கல்யாணத்தில் ஒலித்த வேத மந்திரம்; அங்கே சிறப்பு விருந்தினராக வந்த அப்போதைய பொதுச் செயலாளர் என்ன செய்தார் தெரியுமா?
தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு துரைமுருகன் இப்படியொரு காரியம் செய்யலாமா? என்பது போல் தி.மு.க-வினரே கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், தி.மு.க தொண்டர் வீட்டுக் கல்யாணத்தில் வேத மந்திரம் ஒலித்த போது, அங்கே சிறப்பு விருந…