Nakkheeran
“நிறைய தப்பு பண்ணிருக்கேன், கீழ விழுந்திருக்கேன்...” - சூர்யா பேச்சு!
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய சூர்யா படக்குழ…