IBC Tamil
கைதிகளின் உயிர் பாதுகாப்பு அரசின் பொறுப்பு - நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தாக்கப்படுவது, சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவது மற்றும் உயிரிழப்பது போன்ற சம்பவங்களைத் தனித்தனியான சம்பவங்களாகக் கருத முடியாது என்றும், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், தானும் தடுப்புக்காவலில் இருந்த காலப்பகுதியில், சிறைச்சாலையின் சுவர்களுக்கு ...