உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவை : யாழில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களை முறையான பதிவுக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட சேவையாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பாடசாலை போக்குவரத்துச் சேவைச் சங்கத் தலைவர் கோகுலம் தலைமையில், சுண்டுக்குளியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பிரிவின் இரண்டாம் நிலை அதிகாரியும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.