Nakkheeran
”கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்”; ஆந்திராவுக்குப் புறப்பட்ட மின்வாரிய ஊழியர்கள்
’முரசு’ புயல் காரணமாகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், ஆந்திர அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதோடு, பலத்த காற்று வீசும் என்பதால் ஏராளமான மின் கம்பங்கள் சாயவும் வாய்ப்புள்ளது. எனவே, மின் விநியோக கட்டமைப்பில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதால், மின் விநியோக கட்டமைப்புகளை விரைந்து சரிசெய்ய உதவுமாறு தமிழக முதல்வர் விஜயிடம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு கோரிக்கை வைத்திருந்தார். ஆந்திராவில் புயலின் காரணமாக 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான மின் கம்பங்கள் வரை சேதமடைய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டது. இதனால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு தமிழக முதல்வர் விஜயிடம் உதவி…