Indian Express Tamil
ஆதரவற்றோர், முதியவர்களுக்காக 100 ஏக்கரில் பிரம்மாண்ட 'ஆனந்த் ஆஸ்ரய்' நகரியம்: நீடா அம்பானி அடிக்கல் நாட்டினார்
ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்நாள் முழுவதற்கும் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புதிய சமூக நலத் திட்டத்தை ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவரான நீதா அம்பானி அறிவித்துள்ளார். மும்பைக்கு அருகில் உள்ள கர்ஜத் பகுதியில், சுமாா் 100 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த புதிய நகரியத்திற்கு 'நீதா முகேஷ் அம்பானி ஆனந்த் ஆஸ்ரய்' (Nita Mukesh Ambani Anant Ashray) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. குடும்பத்தை இழந்த குழந்தைகள், சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்…