Indian Express Tamil
ரூ. 5 கோடி லஞ்சம் பேரம்: ராஜ்மோகன் மீது நடவடிக்கை கோரி லஞ்ச ஒழிப்புத் துறையில் தி.மு.க புகார்
இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியதை ஆதாரமாக கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல் தடுப்பு பிரிவில் தி.மு.க-வின் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் புகார் மனு அளித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறுகிறார் என லயோலா மணி வந்து தன்னிடம் வந்து கூறினார் என்றும், ஆனால் 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் காசு வாங…