Indian Express Tamil
'பெரியார் கொள்கையை எதிர்பார்க்கல; அண்ணா, கலைஞருக்கு துரோகம் செய்யாமல் இருந்திருக்கக் கூடாதா?' விடுதலை ராஜேந்திரன் கேள்வி
தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் - சங்கீதா இணையரின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ரவி தம்பதியின் மகன் தீபக் ரவிக்கும் சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை பார்ப்பனர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி நடத்தி வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு துரைமுருகன் இப்படியொரு காரியம் செய்யலாமா? என்பது போல் தி.மு.க-வினரே கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், 'துரைமுருகனிடம் பெரியார் கொள்கையை நாம் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அண்ணா, கலைஞர்…