Indian Express Tamil
சேலைக்கு இப்படி ஒரு பிளவுஸா? சிக்கு கோலத்தில் அசத்தும் டிசைன்கள்
சேலை அணியும்போது அதன் நிறம், பார்டர், டிசைன் ஆகியவற்றுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு அதற்கு ஏற்ற பிளவுஸ் டிசைனுக்கும் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, ஒரே மாதிரியான பிளவுஸ் டிசைன்களைத் தவிர்த்து, வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் தோற்றமளிக்க விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது பாரம்பரியமான சிக்கு கோலத்தின் அழகிய வளைவுகளைப் பிளவுஸ் டிசைனாக மாற்றும் புதிய ஃபேஷன் டிரெண்ட் கவனம் ஈர்த்து வருகிறது. நம் வீட்டு வாசலில் தினமும் போடப்படும் சிக்கு கோலம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; அதில் பாரம்பரியம், கலைநயம் ம…