Indian Express Tamil
பட்டினப்பாக்கம் விவகாரத்தில் விஜய் முடிவு எடுத்து விட்டாரா? குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விடப்பட்டது குறித்து பூவுலகின் நண்பர்கள் கேள்வி
சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்ட சபையில் முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. ஆனால், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் எதிர்ப்பை அடுத்து, பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் திட்டம் கைவிடப்படலாம் என்றும், மாற்று இடங்களை அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது. கேள்வி இந்…