Indian Express Tamil
இனி பெட்ரோலுக்குப் பதில் 100% எத்தனால்; E100 எரிபொருள் விதியில் மத்திய அரசு செய்த மாற்றம்
மத்திய அரசு, மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ல் திருத்தம் செய்து, கிட்டத்தட்ட முழுவதும் எத்தனால் கொண்ட E100 எரிபொருளில் இயங்கக்கூடிய ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம், குறிப்பிட்ட வகை வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய எரிபொருளின் வரம்பை விரிவுபடுத்துகிறது. ஆனால், இந்தியச் சாலைகளில் தற்போது இயங்கும் அனைத்து பெட்ரோல் கார்களும் E100 எரிபொருளைப் பயன்படுத்தலாம் என்று இதற்குப் பொருள் அல்ல. E100 விதியால் உங்களுக்கு என்ன மாற்றம்? இந்த விதித் திருத்தம், குறிப்பிட்ட எரிபொருளைப் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட வாகனங்களின் பயன்…