Maalaimalar
உ.பி.யில் கோவிலுக்கு வந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை
உத்தரப் பிரதேசத்தில் கோவிலுக்கு வந்த சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவற்றை வெளிநாட்டிற்கு விற்பனை செய்த பூசாரி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில் சியாம் பிகாரி என்பவர் பூசாரியாக வேலை செய்து வந்தார். இவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது…