Nakkheeran
”என்னை யாராலும் தொட முடியாது”; ரகசிய கேமரா விவகாரத்தில் அமைச்சர் பகிரங்க சவால்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குறிவைக்கப்பட்ட ரகசிய வீடியோ விவகாரத்தில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பகிரங்க சவால் விட்டுள்ளார். கர்நாடகாவில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை குறிவைத்து ரகசிய கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்ட விவகாரம், அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இந்த ரகசியத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் வாங்கப்பட்டு, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், ஒன்றிய அமைச்சருமான குமாரசாமியின் அரசு இல்லத்தில், அவரது உதவியாளரான பிரஜ்வல் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பெங்கள…