Nakkheeran
கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்- சிறைக் காவலர்கள் சஸ்பெண்ட்
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்த கைதிகள் காவலர்களை கூண்டோடு தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். நேற்று இரவு முழுவதும் தேனி ம…