Nakkheeran
தவெகவினரின் வசூல் வேட்டை: தீபாவளியில் திக்குமுக்காடும் தரைக்கடை வியாபாரிகள்-திமுக கடும் கண்டனம்!
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகளுடன் வியாபாரிகளுக்குக் கொண்டாட்டமான காலமாக அமையும். ஆனால், கரூர் மாநகராட்சிப் பகுதியில் தற்காலிக தரைக்கடைகள் அமைத்துத் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் ஏழை எளிய வியாபாரிகளுக்கு, இந்த முறை தீபாவளி கொண்டாட்டத்திற்கு முன்பே ஒரு பேரிடி வந்து சேர்ந்துள்ளது. தரைக்கடை வியாபாரிகளிடம் விதிகளுக்குப் புறம்பாக முறைகேடாகப் பணம் வசூல் செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கரூர் மாநகராட்சிப் பகுதிகளில் பண்டிகைக் காலங்களில் தற்காலிகத் தரைக்கடைகள் அமைக்கும் வியாபாரிகளிடம் கடந்த ஐந்தாண்டுகளாக…