Indian Express Tamil
தமிழகத்திலேயே முதல்முறையாக கோவை ரயில்வே ஸ்டேஷனில் சூப்பர் வசதி: மூத்த குடிமக்கள்,மாற்றுத் திறனாளிகளுக்காக 24 மணி நேர உதவி மையம்
கோவை ரயில் நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக வழிகாட்டி உதவி மையம் தொடங்கப்பட உள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலுடன், தெற்கு ரயில்வேயின் முழு ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடமாட இயலாத பயணிகள் பலனடைவர். திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்பதில் தொடங்கி, நடைமேடைகள் வழியாக ரயிலில் உள்ள அவர்களின் இருக்கையைச் சென்றடையும் வரை சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும…