Hindu Tamil Thisai
மொராக்கோ சுற்றுலா: இளஞ்சிவப்பு நகரம்
விமானம் பஞ்சுப்பொதிகளை விலக்கி, இறங்கத்தொடங்கியதும் கீழே விரிந்திருந்த நிலப்பரப்பை ஆர்வமாய்ப் பார்க்கிறேன். யாரோ ஒரு பெரிய அளவுகோலை வைத்து பூமியின் மேற்பரப்பில் நேர்கோடுகளைக் கிழித்தது போல நிலம் பல பகுதிகளாக நேர்த்தியாக பிரிந்து கிடந்தது - சதுரங்களாக, செவ்வகங்களாக… சில இடங்களில் வளைவுகளாக. மனிதனால் உருவாக்கப்பட்ட விவசாய நிலங்களா, இயற்கை தன் விரல்களால் வரைந்த மலைச்சரிவுகளா? தெரியவில்லை. பனிபடர்ந்த அட்லஸ் மலைத் தொடர்…