Nakkheeran
சிறையிலிருந்து தப்பிய கைதி முன்வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு : நீதிபதி அதிரடி உத்தரவு!
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே சிறையிலிருந்து தப்பிச் சென்ற மீனாட்சி சுந்தரம், சரணடைவதற்கு முன்னதாக ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் மீனாட்சி சுந்தரம் பேசுகையில், “தேனி மாவட்ட சிறைக்குச் சென்று பாருங்கள். எங்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட மற்ற விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்று விசாரித்துப் பாருங்கள். இதையெல்லாம் கேட்டதற்காக எங்களை மிகவும் சித்திரவதை செய்தார்கள். மனு கொடுக்க வருபவர்களைக்கூடப் பார்க்க விடமாட்டார்கள். தண்டனை கொடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் சிறைக்குள் எ…