உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

உங்கள் பி.எஃப் பணம் இனி ஸ்டார்ட்அப் கம்பெனிகளுக்குப் போகுதா? அதிர்ச்சி கிளப்பும் புதிய முதலீட்டுத் திட்டம்

சம்பளம் வாங்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது ஓய்வூதிய காலத்திற்கு கைகொடுக்கும் மிக முக்கியமான சேமிப்பாகும். ஒவ்வொரு மாதமும் ஊழியரின் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும், நிறுவனத்தின் பங்களிப்பும் இதில் சேர்க்கப்படுகிறது. ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்கும் என்ற நம்பிக்கையோடு இந்த நிதி சேமிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வைப்பு நிதியை இ.பி.எஃப்.ஓ முதலீடு செய்யும் முறையில் ஒரு பெரிய மாற்றம் வரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முதலீட்டுத் திட்டம் என்ன? ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), மாற்று முதலீட்டு நிதிக…