Indian Express Tamil
காளான் சாப்பிட்டால் குள்ள மனிதர்கள் தெரிவார்களா? 100 ஆண்டுகால மர்மத்திற்கு விஞ்ஞானிகள் விடை
காட்டுக் காளான்களை உட்கொள்வதால் மனிதர்களின் மனநிலையிலும் பார்வைத் திறனிலும் ஏற்படும் விசித்திரமான மாற்றங்கள் குறித்து, உலகளவில் தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட வகைக் காளானைச் சாப்பிடும்போது கண்கள் முன்னால் குள்ள மனிதர்கள் உலாவுவது போன்ற தோற்றம் ஏற்படும் நிகழ்வுக்கு, ஆராய்ச்சியாளர்கள் தற்போது அறிவியல் பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளனர். கடந்த 1934-ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் சில குறிப்பிட்ட காட்டுக்காளான்களை உண்ட மக்களுக்கு, 3 முதல் 30 சென்டிமீட்டர் வரையிலான சிறிய வண்ணமயமான மனித உருவங்கள் நடமாடுவது போன்ற பிரமை ஏற்பட்டது. இலக்கியங்களில் சொல்லப்படும் 'லில்ல…