Indian Express Tamil
புதிய தலைமை செயலகம் கட்ட பட்டினப்பாக்கம் குடியிருப்பு அகற்றம்? தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்
பட்டினபாக்கத்தில் பழைய குடியிருப்புகளை அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகவா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இது குறித்து தமிழ்நாடு தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் அளித்துள்ளது. சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்ட சபையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. ஆனால், பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீ…