உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணி நேரம் பூட்டி வைத்தார்கள்: விஜயைச் சந்திக்க முயன்ற கே.எம்.சரீப் குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் மக்களுடைய கோரிக்கை மனு மற்றும் புத்தகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜயிடம் நேரில் வழங்கிடச் சென்ற தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.சரீப் உட்பட 4 பேரை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பூட்டிய அறையில் அதிகாரிகள் அடைத்து வைத்ததாகக் கூறி கே.எம்.சரீப் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் கே.எம்.சரீப் முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: “இன்றைய தினம் காலையிலே ஒரு 9:30 மணியளவிலே புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் இங்கே வருகை தந்திருக்கிறார் என்கிற செய்தி கேள்வ…