IBC Tamil
தேர்தலில் தோல்வியடைந்தால் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவேன்: ட்ரம்ப் எச்சரிக்கை!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினால், அக்கட்சியின் சட்டமூலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜனாதிபதிக்குள்ள வீட்டோ அதிகாரத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், தனது நிர்வாகத்தில் பணியாற்றும் அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காகப் பரந்த அளவிலான முன்கூட்டிய ஜனாதிபதி மன்னிப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த ...